7008 கிரகித்தல் Comprehension

க.குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 6ஆவது பதிப்பு, மே 1989, 1வது பதிப்பு, ஜனவரி 1984. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(4), 50 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 20×13.5 சமீ.

இது Comprehension என ஆங்கிலத்தில் வழங்கும் கிரகித்தல் பயிற்சியை வளர்க்க உதவும் நூல். கல்வியறிவோடு இயல்பான பகுத்தறிவு, சிந்தனைத்திறன், ஆக்கபூர்வச் செயற்பாடுகள், பலரிடையே தன்னை இனம்காட்டும் ஆளுமை, பொறுப்பேற்கும் ஆற்றல் என்பனவற்றைக் கிரகித்தல் திறன் வளர்க்கின்றது. ஒருவரின் அறிவுத்திறனை மதிப்பிடுவதற்கும் கண்டறிவதற்கும் சில தேர்வுகள் அவசியமாகின்றன. கிரகிப்புத் திறன், கிரகிக்கும் மெய்க் கருத்து, சுருக்கக் கிரகித்தல்-கிரகிக்கும் சுருக்கக் கருத்து, விரிவுக் கிரகித்தல்-கிரகிக்கும் விரிவுக் கருத்து, கிரகித்தல் மாற்றுக் கூற்றுக்கள் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18582).

கிரகித்தல்.

க.குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 2வது  திருத்திய பதிப்பு, ஜனவரி 1995, 1வது தமிழகப் பதிப்பு, ஏப்ரல் 1990. (யாழ்ப்பாணம்: மகாலட்சுமி அச்சகம்).

(4), 58 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19×13.5 சமீ.

பொதுவாக உலக நாடுகளில் பொது அறிவு, நுண்ணறிவு, கிரகித்தல் ஆகிய மூன்று துறைகளில் ஒருவரின் அறிவுத்திறன் மதிப்பிடப்படுகின்றது. சொல்பவற்றிலிருந்தும் படிப்பவற்றிலிருந்தும் மெய்க்கருத்தைப் புரிந்துகொள்வது கிரகித்தலாகும். கிரகிக்கும் மெய்க்கருத்து, கிரகிக்கும் சுருக்கக் கருத்து, கிரகிக்கும் விரிவுக் கருத்து, கிரகிக்கும் மாற்றுக் கூற்றுகள் ஆகிய நான்கு பகுதிகளாக இந்நூலில்  கிரகித்தற் பயிற்சிகள் விபரிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1984இல் இலங்கையில் வெளியான இந்நூலின்; தமிழக முதற்பதிப்பு 1990இல் சென்னை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வெளிவந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130757).

ஏனைய பதிவுகள்

9224 பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்திலுள்ள திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்.

ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (உரையாசிரியர்), மு.கந்தையா (உரை விளக்கம்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1972, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்:

Gratisspinn Disse beste free spins i casino

Content Shotz Casino 🎰 Hvilke spilleautomater fals bust flest gratisspinn igang? Av den grunn bruker du mine gratisspinn Free spins uten gave Oppdelte gratisspinn Vault-funksjonen