7022 களிமண் பதிவுகள் முதல் கணனிப் பதிவுகள் வரை:  நூலக தகவற் சேமிப்பு ஊடகங்களின் வளர்ச்சிப் போக்கு.

இ.கிருஷ்ணகுமார்.  யாழ்ப்பாணம்:  அகிலம் வெளியீடு, 7 ரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (யாழ்ப்பாணம்: ஜோசப் பாலா, மணி ஓசை அச்சகம், 12 புனித பத்திரிசியார் வீதி).

(8), 34 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 20.5×13.5 சமீ.

களிமண்தட்டுத் தொடக்கம் நவீன கணனி வரை மனிதன் உருவாக்கிய தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை, வரலாற்றுப் பின்னணியில் இந்நூல் எடுத்துரைக்கின்றது. புதிய தகவல் ஒழுங்கமைப்பு எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுக்குச் சாதகமாகவும், மூன்றாம் உலக நாடுகளுக்குப் பாதகமாகவும் அமையுமென்பதையும் இங்கே நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ளார். இராசரட்ணம் கிருஷ்ணகுமார்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட நூலகத்தில் பணியாற்றுபவர். அகிலம் வெளியீட்டகம்  சமூக அறிவியல் சார்ந்த நூல்களை அவ்வப்போது சிறு நூல்வடிவில் வெளியிட்டு வந்துள்ளது. அந்த வரிசையில் இது நான்காவது பிரசுரமாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 470334).

ஏனைய பதிவுகள்