மசூறா ஏ.மஜீத். சம்மாந்துறை: நடமாடும் பெண்கள் பயிற்சி நிலையம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், 1வது பதிப்பு, மே 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கிலங்கையில் சம்மாந்துறையில் 1986 பெப்ரவரி 14 முதல் மே 14 வரை நடைபெற்றுமுடிந்த நடமாடும் பெண்கள் பயிற்சி நிலையத்தின் பூர்த்தியையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். தொழில்வாய்ப்பற்ற யுவதிகள் மத்தியில் சுயதொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டும் முன்னோடி செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் பெண்கள் பயிற்சித்திட்டத்தின் நிறைவையொட்டி பல்வேறு வாழ்த்துச் செய்திகளும் பங்கேற்றோரின் படைப்புகளுமாக இம்மலர் விரிகின்றது.