7034 பஷாரத். ஏ.ஆர்.எம். ஷியாம் (தொகுப்பாசிரியர்).

கட்டுகஸ்தோட்டை: பஷாரத் கலாச்சார வட்டம், 443/31 யட்டியாவல, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ்).

(2), 78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 29.5×22.5 சமீ.

கட்டுகஸ்தொட்ட, யட்டியாவலை என்னுமிடத்தில் அமைந்துள்ள அல்பஷாரத் நிறுவனம் முஸ்லிம்களுக்கானதொரு மத, சமூக சேவை அமைப்பாகும். இது யட்டியாவலை தக்வா மஹல்லாவவைத் (தக்வா பள்ளிவாயில்) தலைமையகமாகக் கொண்டு சமூகப் பணிகளுடன், கலை கலாச்சார இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. இதன் பணிகளுள் ஒன்றாக பஷாரத் என்னும் இந்தத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இஸ்லாமிய சமய, சமூக, கலாசார,  இலக்கிய அடிப்படையைக் கொண்டதாகப் பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்களின் 18 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றது.

ஏனைய பதிவுகள்