7042 மெய்யியல்: ஓர் அறிமுகம்.

சோ.கிருஷ்ணராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(2), xii, 98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-294-8.

மெய்யியல் என்னும் கல்வித்துறையின் விடயப் பரப்பைஅறிவாராய்ச்சியியல் (Epistemology), உள்பொருளியல் (Ontology), அல்லது பௌதீகவதீதவியல் (Metaphysics), மதிப்பியல் (Axiology) என மூன்றாக வகுத்துக் கூறுவர். இம்மூன்று பிரிவுகளுள் அறிவாராய்ச்சியியல் , உள்பொருளியல் ஆகிய இரண்டினைப்பற்றிய ஆழமான ஆய்வுரையாக இந்நூல் விளங்குகின்றது. மெய்யியல் என்றால் என்ன, அறிவாராய்ச்சியியல் 1 (பிளேட்டோவும் டேக்காட்டும்), அறிவாராய்ச்சியியல் 2 (அரிஸ்ரோட்டில், லொக், பார்க்ளி, ஹியும்), உள்பொருளியல், சமய மெய்யியல், நிர்ணயவாதமும் சுயாதீன சித்தமும் ஆகிய ஆறு இயல்களைக் கொண்டமைந்தது.  மெய்யியல்துறை மாணவர்களைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட இந்நூல் மெய்யியல் பற்றிய பாடநூல்களுள் தனித்துவமாக விளங்குகின்றது. பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (1947-2009) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

10555 சீதைக்கோர் இராமன்: கவிதைத் தொகுப்பு.

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்). xvi, 83 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-41614-5-0.