7043 மெய்யியலும் சமயமும்.

பி.எம்.ஜமாஹிர். கண்டி: இலங்கை தென் கிழக்கு ஆய்வு மையம் (South Eastern Research Forum), 303, University Staff Quarters, Dangolla, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கண்டி: Print-Ex Graphics).

vi, 7-72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-8194-04-2.

மெய்யியலும் சமயமும், கிரேக்க மெய்யியல் மரபு, பூரண மனிதனும் மனித விடுதலையும் இருப்புவாதத்துடன் ஒப்புநோக்கு ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மெய்யியலும் சமயமும் என்ற பிரதான பிரிவின்கீழ் அறிமுகம், மெய்யியல், சமயம், இஸ்லாம், சமய மெய்யியல், பௌதீகவாதம் ஆகிய உபபிரிவுகளும் அடங்குகின்றன. சமயமும் மெய்யியலும் மனிதனது அக, உள செயற்பாடுகளோடு கொண்டுள்ள உறவையும், சமயங்கள் பற்றி அறியவும், ஆராயவும் அவற்றை ஒப்பிட்டு நோக்கவும், அவற்றிலிருந்து மனிதன் மேனிலையை எய்திட சமய மெய்யியல் இன்றியமையாதவை என்ற கருத்தை அடித்தளமாக உள்ளடக்கியதாக இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 575098).

ஏனைய பதிவுகள்

17123 ஆட்கொண்ட போது.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா

13587 வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்: சிறுவர் நாடகம்.

சி.மௌனகுரு. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 32 பக்கம், சித்திரங்கள்;,