பா.ஆறுமுகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
88 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 17.5×12 சமீ.
பழுகாமம் திருமதி பாக்கியரெத்தினம் ஆறுமுகம் எழுதிய இந்நூல்ஆத்மீக வாழ்வினைச் சுட்டிக்காட்டும் ஏழு வகையான கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டது. உலக சமநிலை இன்மைக்கு மனித மனமே மூல காரணம், மனித மேம்பாட்டு நெறிக்கு அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு, பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு, ஆட்கொண்டருளிய அன்புசாயி, இல்லத்தரசி கண்ணகியைத் தெய்வமகளாக்கிய கற்புநெறி, நவராத்திரி விழாக்களின் உட்பொருள், அம்மா சாரதா தேவி ஆகிய ஏழு தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி, திருப்பழுகாமச் சிறப்பு ஆகிய இரு கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமய தத்துவங்களுக்குப் பின்னாலுள்ள விஞ்ஞான விளக்கங்களையும் ஆசிரியர் ஆங்காங்கே குறிப்பிடுகின்றார்.