7062 தனக்குள் தானே. 

தி.இரா. கோபாலன். (இயற்பெயர்: திருமலை இராஜகோபால்). பூண்டுலோயா: தி.இராஜகோபால், கைப்புக்கலை தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: அபிராமி அச்சகம்).

92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமலை இராஜகோபால். நாவலப்பிட்டி சென். அன்ட்ரூஸ் கல்லூரியில் 50களில் கல்வி கற்ற இவர், 1992இல் இலங்கை இந்து கலாச்சார அமைச்சினால் தமிழ்மணி பட்டம் பெற்றவர். பகவத் கீதையை வாசித்ததில் தான் பெற்ற கருத்துக்களை அடிப்படையாக வைத்து  சிறுகட்டுரைகளை எழுதி வீரகேசரி வாரமஞ்சரியில் தனக்குள் தானே என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டிருந்தார். அத்தொடரின் நூல் வடிவம் இதுவாகும். அர்ச்சுனாம்சம், நேர்ச் சிந்தனைகள், பிராணாயாமம் என்னும் உணவு போன்ற 32 தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25303).

ஏனைய பதிவுகள்