7061 சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்: தொகுதி 2.

சுவாமி விபுலாநந்தர் (மூலம்), சா.இ.கமலநாதன், வ.சிவசுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1995.(மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

xii, 1-92, 1-252 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21×13 சமீ.

மூன்று தொகுதிகளில் வெளியிடப்பெற்ற சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களின் திரட்டின் இரண்டாவது தொகுதி இதுவாகும். அவர் 1925 முதல் 1940 வரை எழுதிய 61 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சுவாமி விபுலாநந்தர் துறவு பூண்டபின் ஸ்ரீராமகிருஷ்ண சங்கப் பணிகளில் ஈடுபடுவதற்காக 1925இல் இலங்கை திரும்பினார். அவ்வாண்டு முதல் 1940 வரை புகழ்பெற்ற பிரபுத்த பாரத என்ற திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 14 ஆங்கிலக் கட்டுரைகள் உள்ளடங்குகின்றன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 481928).

ஏனைய பதிவுகள்

14212 திருவாசகத்தில் சிவபுராணம்: இனிய இலகு தமிழ் உரைநடையுடன்.

சரோஜினிதேவி சிவஞானம் (உரையாசிரியர்). திருக்கோணமலை: திருமதி சரோஜினிதேவி சிவஞானம், தேவி கடாட்சம், 42டீஃ1, தேன் தமிழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). 206 பக்கம், விலை: