C.M.A. அமீன். திஹாரிய 11875: ரேஷ்மா பதிப்பகம், 348-1, வரபலான ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 12: நிஸான் பிரின்டர்ஸ், 64N, பீர் சாஹிப் வீதி).
72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-1691-02-8.
வாழ்வில் வெற்றிபெற வழிகூறும் அறிவுரைக் கட்டுரைகளைக் கொண்ட நூல். வெறும் உபதேசங்களின் தொகுப்பாகவன்றி உயிருள்ள உதாரணங்கள், உணர்வூட்டும் உருவகக் கதைகள் மூலம் வாழ்வியல் வெற்றிக்கான தன் கருத்தைச் சொல்லவிளைகின்றார். நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை என்பவற்றுக்கான வழிகாட்டல்களாக இதிலுள்ள 63 குறுங்கட்டுரைகளும் அமைகின்றன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 618745).