7069 அன்புக் கரங்கள்: உளவளத்துணை சார்ந்த கட்டுரைகளும் சிறுகதைகளும்.

P.A.C.ஆனந்தராஜா. வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (வவுனியா: ஜேனிகா கிராப்பிக்ஸ், இல. 71, வைரவர் கோவில் வீதி).

xv, 162 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

உளவளத்துணை (Counselling) சார்ந்த இந்நூல், யாழ்ப்பாணம் சாந்தியகத்தில் உளவளத்துணையாளராகப் பணிபுரிந்த காலத்தில் தான் பெற்ற அனுபவங்களுக்கு ஆசிரியர் வழங்கிய இலக்கிய வடிவங்களாகும். முன்னதாக இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியில் 25 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஓய்வுபெற்று, யாழ்ப்பாணம் சாந்தியகத்தில் உளவளத்துணையாளராகப் பணியாற்றினார். பின்னாளில் வவுனியாவில் தாபிக்கப்பட்ட மனோசாந்தி என்ற உளவளத்துணை நிலையத்தின் (Manosaanthy- Association for Mental Health and related Services, No.407, Horawapothana Road, Rambaikulam, Vavuniya)இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 151420).

ஏனைய பதிவுகள்

9566 இளைஞர் விருந்து.

மு.நல்லதம்பி. வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, 1958.(யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). ix, 115 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. வட்டுக்கோட்டை முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி அவர்கள் எழுதிய பாடல்களின்