மனோன்மணி சண்முகதாஸ், சந்திரமௌலீசன் லலீசன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).
xii, 196 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-248-1.
சேக்கிழாரது கருத்துக்களை அறியவும் உணரவும் உதவும் இத்தொகுப்பில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுந்தரர், காரைக்காலம்மையார், திருநீலகண்டர், சிறுத்தொண்டர், கண்ணப்பர் என்னும் ஐவருடைய அன்புநெறி பற்றிக் கட்டுரையாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரியபுராணம் காட்டும் இளமை என்ற கட்டுரை பெரியபுராணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இளமை பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. புராணங்களின் கட்டமைப்புகள் பற்றிய அறிமுகம் ஏனைய கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. செய்யுள் நடையில் அமைந்த சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் பேரிலக்கியத்தைக் கற்க இளம்தலைமுறைக்கு இத்தொகுப்புநூல் ஒரு திறவுகோலாக அமையும். யாழ்ப்பாணத்தில் 2009ம் ஆண்டு பெரியபுராணம் பற்றிய தொடர் கருத்தரங்குகள் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. மன்றத்தின் புதிய கட்டிடத்தில் நான்கு கருத்தரங்குகளும், புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இரண்டு கருத்தரங்குகளும் நடைபெற்றன. அவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட இக்கட்டுரைகளை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், சு.ளு.சந்திரசேகர், கலாநிதி என்.கிருஷ்ணவேணி, ச.லலீசன், விக்னேஸ்வரி பவநேசன், கு.றஜீபன், நாச்சியார் செல்வநாயகம், செல்வ அம்பிகை நடராஜா, ச.மார்க்கண்டு, ஈஸ்வரநாதபிள்ளை குமரன், கலாநிதி கலைவாணி இராமநாதன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.