7093 வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்.

இளையதம்பி சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: இ.சுப்பிரமணியம், 107, கண்டி வீதி, 1வது பதிப்பு, ஆனி 1987. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).

xiv, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூல் சிவ வணக்கம், வேதங்கள், சமயம்-சைவம்-சைவ சித்தாந்தம்-சிவம், வேத தரிசனங்கள், தரும சாத்திரங்கள், ஆகமங்கள், நால்வகைப் புருஷார்த்தங்களும் வருணாசிரம தருமமும், சைவ சித்தாந்த தத்துவ விளக்கம், அத்துவிதம் ஆகிய ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக சிவஞானபோதப் பொழிப்பு, சிவஞான சித்தியார் உணர்த்தும் ஞானநெறி ஆகிய இரு தலைப்புகளின்கீழ் சிவஞான போதமும் சிவஞான சித்தியாரிலே பன்னிரு திருப்பாக்களும் பொழிப்புடன் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93682).

ஏனைய பதிவுகள்

15457 சங்கம்: மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்புவிழாச் சிறப்புமலர்.

வெல்லவூர்க் கோபால் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2020. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185யு, திருமலை வீதி).  258 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ.,