7105 வியாதியிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

கிறிஸ்தவ இறையியல் தொடர்பான பக்தி இலக்கியங்களைத் தொடர்ந்து எழுதிவரும் ரூபா செல்வாவின் எட்டாவது நூல் இதுவாகும். லண்டனில் Faith Church of God என்ற கிறிஸ்தவ அமைப்பின் அங்கத்தவராக பாஸ்டர் ரூபா செல்வா இறைபணியாற்றி வருகிறார். உடல் நலம் பெறுவதற்கான தடைகள் எவை என்ற கேள்விக்குப் பதிலாக எட்டு காரணிகளை இவர் வரிசைப்படுத்தி,  அவற்றைத் தனித்தனியாக விளக்குகின்றார். குணமடைவதை அனுபவிக்கத் தடைசெய்யும் அபிப்பிராயங்கள், பாவங்களும் பாவப் பழக்கவழக்கங்களும், நாம் வாழும் உலகில் வாழும் எதிரி, வீழ்ச்சி அடைந்த உலகில் வாழ்வதன் விளைவுகள், சாத்தானும் அவன் சகாக்களும் ஏற்படுத்தும் விளைவுகள், குற்றங்களும் தவறுகளும், அவிசுவாசம் இதை ஒழிக்கும் வழிகள், நோயின் முடிவு பற்றிய தவறான பேச்சை நிறுத்துங்கள் ஆகிய எட்டுக் கராணிகளை விளக்கி மேலதிகமான ஐந்து இயல்களில் தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிகள், பெற்றுக்கொண்ட நலத்தைக் காத்துக்கொள்வது எப்படி?ஆரோக்கியத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியங்கள், வேதவசனமும் உங்கள் உடற்சுகமும், அனுதினமும் உட்கொள்ளவேண்டிய மாத்திரைகள் ஆகிய தலைப்புகளில் மேலும் விடயங்களை விபரிக்கிறார்.      

ஏனைய பதிவுகள்

Jack Hammer Slot Jogue Gratuitamente

Content Jogar Briga Lidador Blackjack VIP O bagarote real online Ataviado para jogar a conspícuo a Jack Hammer 2 ? Outras NetEnt Slots Destasorte, briga