மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத்திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: சன்ஷைன் கிரபிக்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்).
ix, 206 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
இறைத்தொடர்பினால் பல அற்புதங்களைப் புரிந்த 30 சமயகுரவர்கள் ;பற்றிக் கூறும் இந்நூல் அறநெறிப்பாடசாலைகளின் சிறார்களின் அறிவியல் வாசினைக்காக உருவாக்கப்பட்டது. நம்பியாண்டார் நம்பி, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர், காரைக்கால் அம்மையார், திருமூலர், மனுநீதிகண்ட சோழன், அரிச்சந்திரன், ஆதிசங்கரர், இராமலிங்க அடிகளார் (வள்ளலார்), நந்தனார் (திருநாளைப் போவார் நாயனார்), பட்டினத்தடிகள், தாயுமானவர், திருநீலகண்ட நாயனார், குங்குலியக்கலய நாயனார், சேக்கிழார், ஒளவையார், சாவித்திரி, ஆதிகவி வான்மீகி முனிவர், கம்பர், நக்கீரர், அபிராமிப்பட்டர், கச்சியப்ப சிவாசாரியார், தியாகராஜ சுவாமிகள், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், அருணகிரிநாத சுவாமிகள் ஆகிய 30 பேரின் வாழ்வும் இறைபணிகளும் இக்கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 173381).