முருகேச பண்டிதர் (மூலம்), கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: புலவரக வெளியீடு, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
xxiv, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
இற்றைக்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஈழத்துப் பெரும்புலவர் முருகேச பண்டிதர் இலங்கையிலும் இந்தியாவிலும் வசித்தமையாலும் அவரது இறுதிக்காலத்தை இந்தியாவில் கழித்து மறைந்தமையாலும் அவரது முழுமையான படைப்புக்களை எவரும் அறியமுடியாத நிலையில், காணக்கிடைத்த பாக்களைக்கொண்ட தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இதில் சந்திரசேகரப் பிள்ளையார் ஊஞ்சல், சிவபூதராயர் ஊஞ்சல், மயிலணிச் சுப்பிரமணியர் ஊஞ்சல், மயிலணி மகாவிஷ்ணு ஊஞ்சல், மயிலணிச் சிலேடை வெண்பா, மயிலணி விசாலாட்சி அம்மை பதிகம், வத்தாக்கை விசாலாட்சியம்மை ஊஞ்சல், குடந்தை வெண்பா, பதார்த்ததீபிகை, நீதிநூறு, தனிச்செய்யுட்கள் ஆகியவையும் பின்னிணைப்பாக முருகேச பண்டிதர் புகழ்மாலை, ஆறுமுகநாவலர் பேரில் முருகேச பண்டிதர் பாடியது, சுன்னாகம் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை பாடிய முருகேச பண்டிதர் வாழ்த்து என்பன இணைக்கப்பட்டுள்ளன.