7129 மாரியம்மன் மான்மியம்.

ஆ.சபாபதி. கனடா: வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம், Valvai Historical Document Conservation Center, 3947 Lawrence Ave. East, Scarborough, Ontario, M1G 1S1,  2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1972. (கனடா: விவேகா அச்சகம்).

(12), 59 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

மட்டக்களப்பு, தாமரைக்கேணியைச் சேர்ந்த பண்டிதர் ஆ.சபாபதி அவர்கள் எழுதிய மாரியம்மன் பற்றிய விரிவான ஆராய்ச்சியாக வெளிவரும் இந்நூலின் முதற் பதிப்பு நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையத்தினரால் 1972இல் ஆக்கியோனான பண்டிதரின் மறைவையொட்டி (27.10.1972) அவரது நினைவாக கல்வெட்டுருவில் வெளியிடப்பட்டிருந்தது. தொண்டை மண்டல ஆதீனம் அவரது கவித்துவ வித்தகத்தைப் பாராட்டி கவிராசகேசரி என்ற பட்டம் வழங்கியிருந்தது. பண்டிதர் ஆ.சபாபதி அவர்களை ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் மட்டக்களப்பில் அவரில்லத்தில் நேரில் சந்தித்த வேளையில் இந்நூலின் கையெழுத்துப் பிரதியை பெற்றுக்கொண்டார். துர் அதிர்ஷ்டவசமாக நூலின் அச்சுரு முடிவடைவதற்கு முன்னமே ஆக்கியோன் மறைந்துவிட்டார். நூல் வெளியிடப்பட்டவேளை அன்னாரின் நினைவஞ்சலியாகவே அதனை வெளியிடமுடிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12662 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1976.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).