7137 திருக்கேதீச்சர மான்மியம் 5: நித்திய நைமித்திய காண்டம்.

மு.கந்தையா. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (கொழும்பு 6: டெக்னோ பிறின்டர்ஸ், 55 டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை).

vi, 170 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ.

திருக்கேதீச்சர மான்மியம் ஆறு காண்டங்களாக எழுதப்பட்டது. புராதன காண்டம், பொற்பொளிர் காண்டம் என்பவை திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையால் சிவானந்த குருகுல வெளியீடாக வெளிவந்தன. கரந்துரை காண்டம், நித்திய நைமித்திய காண்டம் இரண்டம் திருப்பணிச்சபையால் வெளியிடப்பட்டன. மற்றைய இரு காண்டங்கள் பற்றிய தகவல் இல்லை. நித்திய நைமித்திய காண்டம் நித்திய பூசைப் படலம், நைமித்திகப் பொது இலக்கணப் படலம், மாச நட்சத்ரோற்சவப் படலம், திருவெம்பாவை மகிமைப் படலம், ஆவணி மூல விழாப் படலம், கதிர்காமத் திருவிழாப் படலம், திருநாவுக்கரசு நாயனார் திருவுலாவெழுச்சிப் படலம், பாதயாத்திரைப்படலம், திருஞானசம்பந்தர் திருவுலாவெழுச்சிப் படலம், பாதாளகங்கை பாலாவிக்குதவு படலம், ஸ்மார்த்த நிராகரணப்படலம், சிவராத்திரி விழாப்படலம், பாலாவி காண் படலம், ஆகிய 13 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37851).

ஏனைய பதிவுகள்