7140 வரலாற்றுப் பெருமைமிக்க மாவைக் கந்தன் ஆலயம் திருத்தல வரலாறு.

 கா.சிவபாலன். மாவிட்டபுரம்: மஹாராஜஸ்ரீ R.J.ஷண்முகநாதக் குருக்கள், மாவை ஆதீனம், 1வது பதிப்பு, ஆடி 2010. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ்).

xvi, 158 பக்கம், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.

இந்நூல் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் வரலாற்றைப் பல்வேறு ஆவணங்களின் வழியாகப் பதிவுசெய்கின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய கோவில் பற்றிய குறிப்புடன், மாவைக் கந்தசுவாமியார் ஆலய கட்டிய இறுதி வாசகங்கள், கந்தபுராணக் கவிமலர்கள், மாவிட்டபுரக் காலம், மாவிட்டபுரத் தல எல்லைகள், வானளாவும் மேற்குவாயில் இராஜகோபுரம், கோவிற்கடவை, மாவை ஆதீன நிர்வாக பரிபாலனம், மாவை ஆதீனத்தின் ஆறாவது ஆதீனகர்த்தா (பிரம்மஸ்ரீ சு.துரைச்சாமிக் குருக்கள்), சிதம்பரதீட்சிதர்கள், மாவை ஆதீன வம்சாவளி ஒரு பார்வை, ஏழாவது ஆதீனகர்த்தா (மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள்), கந்தபுராண ஏடு, மஹோற்சவகால விழாக்கள், மஹோற்சவகால வாகன ஒழுங்குகள், திருமடங்கள், காணிநிலச் சொத்துகள், மாவைக்கந்தன்மீது பாமாலை பாடிய புலவர்கள், மாவை முருகன் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல்கள், மாவைக்கந்தன் வரலாறு கூறும் நூல்கள், மாவை ஆதீன வெளியீடுகள், மாவைப்பதியில் வாழ்ந்த தமிழறிஞர்கள், முருக பக்திகொண்ட அறிஞர்கள், மாவிட்டபுரத் திருத்தலமும் அரசியல் தலைவர்களும், மாவை ஆதீனமும் பண்டிதமணியும், மாவை ஆதீனமும் சிவத்தமிழ்ச்செல்வியும்,  மகேஸ்வர பூசை தொண்டர்சபை, மாவிட்டபுரக் காங்கேயன் மூர்த்தி (நா.கதிரவேற்பிள்ளை எழுதியது), கோவிற்கடவை வெள்ளிவேலவன், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்துடன் மாவிட்டபுரத் தொடர்பு, மாவை ஆதீன மகாமண்டப கருங்கல் திருப்பணி, சு.சடேசபிள்ளையின் மாவைமுருகன் பிள்ளைத்தமிழ், தி.கி.சீதாராம சாஸ்திரிகளின் மாவை சுப்பிரமணியக்கடவுள் பதிகம், மாவை யமக அந்தாதி, மாவை தண்டபாணி பதிகம், மாவை முருகன் தலவரலாறு, கந்தரலங்கார விரிவுரைச் சிறப்பு, கந்தர் மாவை வெண்பா, வாழ்வுபெற்ற வல்லி, கோவிற்கடவை, மாருதப்புரவீகவல்லி, மாவை முருகன் கவிப்பூங்கொத்து, சித்திரகவி, மாவைநகர் முருகவேள் பதிகம், மாவைக்கலிவெண்பா, மாவை சுப்பிரமணிய தோத்திர விருத்தம், ஊஞ்சற் பாக்கள், மாவை சுப்பிரமணியர் தோத்திரம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் மாவிட்டபுரம் சார்ந்ததும், அங்கு கோயில்கொண்டெழுந்த முருகன்சார்ந்ததுமான ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10581 தொந்தரவுக்கு மன்னிக்கவும்: கவிதைத் தொகுப்பு.

கடலூரான் சுமன் (இயற்பெயர்: மரியாம்பிள்ளை சுமன்). ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி). 74 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு:

Wolf Journey

Posts Scramble Terminology Games Arcade Games Day and age From Spatial Measuring Begins: Apple Sight Professional Will be here People individually take a look at