7139 யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயச் சித்திரத் தேர்த் திருமலர்.

மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: ஆலய பரிபாலன, திருப்பணிச் சபைகள், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயம், நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஜுலை 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

vi, 90 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 29.5×21 சமீ.

27.7.2006 அன்று சித்திரத்தேர்த் திருவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்புமலர் இது. அருளாசிச் செய்திகள், வாழ்த்துரைகள், ஆலயத் திருப்பணிகளும் நன்றியும், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் வழிபாட்டுக் கவிதைகள், கட்டுரைகள், ஆலய பரிபாலன சபையினர் விபரம் ஆகிய தலைப்புகளின்கீழ் இம்மலர் அழகுறத் தொகுக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொன்மை (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்), அன்னை வழிபாடு (திருமதி நாச்சியார் செல்வநாயகம்), சக்தி வழிபாடு (சொ.தர்மகுலசிங்கம்), ஈழத்து அம்மன் ஆலயங்கள்-ஒரு வரலாற்றுப் பார்வை (பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா), ஆலயப் பண்பாட்டில் மகோற்சவம் (பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர்), தமிழ் இலக்கியத்தில் தேர் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்), இரதோற்சவத்தின் சிறப்பு (பிரம்மஸ்ரீ  இ.சுப்பிரமணியக் குருக்கள்), சரீரத்தின் வடிவமே சித்திரத்தேராகும் (செ.பத்மநாதன்), தேரோட்டம் வாழ்வின் நீரோட்டம் (சிவஸ்ரீ சதா.மகாலிங்கசிவக் குருக்கள்), அன்னை பாடல்கள் (கவிஞர் இ.குகதாசன், கவிமாமணி மா.த.ந.வீரமணி ஐயர்), அன்னை வழிபாடு (கலாநிதி பொ.இரகுபதி) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 160977).

ஏனைய பதிவுகள்

Angeschlossen Casino Qua Search engine Pay

Content Ist Paysafecard Ihr Sicherer Zahlungsweg? | Herr Bet Bet No Deposit Bonus Erreichbar Spielbank Unter einsatz von Yahoo and google Pay Retournieren: Begleichen Qua Gpay Skrill

9815 பல்வேறு நாவல்களைப் பற்றிய சுவையான கண்ணோட்டம்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்). viii, 112 பக்கம், விலை: