பி.இரயாகரன். சென்னை 600002: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, 2001. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ்).
272 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.
இந்த நூல், மார்க்சியம் மீது நவீன முதலாளித்துவ பெண்ணியவாதிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதிலளிக்கின்றது. சமுதாயத்தின் சரிபாதியான பெண்களின் மீது, குவிந்துகிடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், சமுதாய அமைப்பின் முழுமைக்கும் இடையில் உள்ள உறவை-முரணை இந்நூல் சமுதாய வாழ்வின் நடத்தையிலிருந்து ஆய்ந்து அறிவிக்கின்றது. பெண்ணியம் என்பது வேறெவற்றுடனும் இணைத்துப் பேச முடியாத-பேசக்கூடாத தனிப்பிரச்சினை என்று கூறி பாலியல் நுகர்வு வேட்டையே பிரச்சினைக்குத் தீர்வாக நவீன ஆணாதிக்க ஆய்வுகள் முன்வைக்கின்றன என்று குற்றஞ்சாட்டும் இந்நூல், வர்க்க ஒடுக்குமுறையின் நீட்சியாக விளைந்த ஆணாதிக்கம் பெண்களின் மீதான அதன் குரூர ஒடுக்குமுறைகளையும் அதனை அடித்து நொறுக்குவதற்கான பெண்களின் போராட்டம் எப்படி தவிர்க்கவியலாமல் வர்க்கப்போராட்டத்துடன் இணைந்தே இருக்கின்றது என்பதையும் விளக்குவதில் இந்த நூல் மற்றைய பெண்ணியவாத ஆய்வுகளிலிருந்து வேறுபடுகின்றது. நூலாசிரியர் இரயாகரன் பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்பவர்.