பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம். கொழும்பு 7: பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம், மேஃபா இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம், 120/10, விஜேராம மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1985. (கொழும்பு 13: ஆனந்தா அச்சகம், 82/5 ஆட்டுப்பட்டித் தெரு).
(8), 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் தசாப்த நிறைவினையொட்டி (1975-1985) இலங்கையில் ஏற்பட்ட பெண்களின் முன்னேற்றம் பற்றிய மதிப்பீடாக இக்கட்டுரைத் தொகுப்பு அமைகின்றது. அபிவிருத்தித் திட்டமிடலில் பெண்களை ஒருங்கிணைத்தல் (சுவர்ணா ஜயவீர), ஐ.நா.வின் பெண்கள் தசாப்தம்: இலங்கைப் பெண்களின் சட்டபூர்வ அந்தஸ்தில் ஏற்படுத்திய தாக்கம் (சாவித்திரி குணசேகர), பெண்கள் பற்றிய ஆராய்ச்சியும் தகவலும் (ஹேமா குணத்திலக்க), பெண்களும் கல்வியும் (சுவர்ணா ஜயவீர), பெண்களின் உடல்நலமும் ஊட்ட நிலையும் (பிரியாணி சொய்சா), பெண்களும் வேலைவாய்ப்பும் (சுவர்ணா ஜயவீர), ஐக்கிய நாடுகள் மகளிர் தசாப்தத்தில் பெண்களும், தீர்மானம் எடுக்கும் பொறுப்பும் (விமலா டி சில்வா), சமுதாய நடவடிக்கைகளில் பெண்கள் பங்குபற்றுதல் (மல்சிறி டயஸ்), 1975-1985 ஆண்டுகட்கிடைப்பட்ட தசாப்தத்தில் பெண்மையுணர்வுகள் பற்றிய சில தோற்றப்பாடுகள் (குமாரி ஜயவர்த்தன), மகளிரும் தொடர்பு ஊடகங்களும் (ஹேமா குணதிலக்க) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளை U.L.ஜௌபர், M.R.சுப்ரமணியம், K.நடனசபாபதி, S.சந்திரசேகரம், ஜெயராணி பெர்ணாண்டோ, M.தில்லைநாதன். T.G.பாலேந்திரன், கௌரி பழநியப்பன், பூமணி குலசிங்கம் ஆகியோர் தமிழாக்கம் செய்துள்ளனர். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 524571).