ஆனந்த டபிள்யு. பீ. குருகே (தொகுப்பாசிரியர்). கொழும்பு: மத்திய கலாசார நிதியம், கல்வி, கலாசார விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 1994. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506 ஹைலெவல் வீதி, நாவின்ன).
(16), 279 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
கல்வி கலாசார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் W.J.M.லொக்கு பண்டார அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில், பூர்வீக குடியேற்றங்கள், இலங்கை இந்திய உறவுகள், மஹிந்தரின் வருகை, மஹிந்தரின் போதனை, ஸ்ரீமகாபோதி, புனித தந்தச் சின்னம், நீதி நெறிகள், சுற்றாடல், பிரித் பாராயணம், கிராமிய மதச் சடங்குகளும் நம்பிக்கையும், கல்வியின் தோற்றம், சிங்கள எழுத்துருக்களின் தோற்றமும் அபிவிருத்தியும், பாளி இலக்கியம், சிங்கள இலக்கியம் (பொலநறுவை-கோட்டே காலம்), சிங்கள மக்கள் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, மொழியும் இலக்கியமும், ஆயுள்வேத வைத்திய முறை, பண்பாட்டு விதிகள், ஓவிய மரபு, கண்டிக்காலச் சுவரோவியங்களும் பாரம்பரிய ஓவியக் கலைகளும், அனுராதபுரக்கால சமயக் கட்டடங்களும் சூழலும் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூல் சிங்கள-தமிழ் கலாச்சாரங்கள் பற்றி விபரிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31348).