R.C.D.அலன் (ஆங்கில மூலம்) செ.நவரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 36, சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (இலங்கை: அரசாங்க அச்சுத் திணைக்களம்).
x, 212 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13.5 சமீ.
லண்டன் பல்கலைக்கழகப் புள்ளிவிபரவியல் பேராசிரியர் R.C.D.அலன் எழுதி லண்டன், Hudchinson & Co நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கில மூல நூலின் தமிழாக்கம் இது. செப்பனிடாத மூலத்தரவுகள், புள்ளிவிபர வெளியீடுகளின் மூலம், வரைப்படங்களும் விளக்கப்படங்களும், பெறுதிப் புள்ளிவிபரங்கள், நிகழ்வெண் பரம்பல்கள், சுட்டு எண்கள், உடன் தொடர்பு அல்லது இணைபு, காலத் தொடர், கூறெடுத்தலும் பொருளுண்மையும் ஆகிய ஒன்பது பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.