7180 ஊருக்கு நல்லது சொல்வேன்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (Colombo 13: Design Lab, 173 P-2, George R.D.Silva Mawathe).

432 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0195-04-6.

புரவலர் புத்தகப் பூங்காவின் 27ஆவது வெளியீடு. தினக்குரல் ஆசிரியரும் யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான வீ.தனபாலசிங்கம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன். 1977இல் வீரகேசரியில் ஒப்பு நோக்காளராக இணைந்து, 2004இல் தினக்குரல் ஆசிரியராகத் தன் கடின உழைப்பால் வளர்ந்தவர். தன் ஆறு ஆண்டுக்கால பத்திரிகையாசிரியர் பணியில் எழுதப்பட்ட 2120 ஆசிரியர் தலையங்கங்களில் தேர்ந்தவற்றைத் தொகுத்து நூறு தலையங்கங்களாகக் கட்டுரை உருவில் வழங்கியுள்ளார். அரசின் கொள்கைகளைத்தன் எழுத்துக்களால் விளக்கி வாசகரின் நாடித்துடிப்பை அறிந்து அதில் அரசுக்கு உரைக்கவேண்டியதை அவ்வப்போது அழுத்தமாகவும், நேர்மையாகவும் எழுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் வீ.தனபாலசிங்கம்.

ஏனைய பதிவுகள்

Melbet Оформление а еще Вербное больше Гелиостат

Любимец,  когда пользователь вырешал вступить в брак во лицензионной компании, в таком случае ваяние профиля https://dnpgca.gouv.ne/uncategorized/melbet-bk-obzor-otkliki-luchshiy-bonus-do-28-000-rub-yuzeram-sports-ru-vo-vremya-registrirovaniya-v-melbet/ достаточно происходить вне ЦУПИС.