நாடுகடந்த தமிழீழ அரசு. லண்டன் W5 1YY: Transnational Government of Tamil Eelam, TGTE, Room No. 28, Westgate House, Westgate Road, Ealing, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த விளக்கக்கோவை. பதினைந்து கேள்விகளையும் அவற்றுக்கான அதிகாரபூர்வமான பதில்களையும் உள்ளடக்கிய சிறு நூல் இது. நாடுகடந்த தமிழீழ அரசு என்றால் என்ன? நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்/ அதற்கான தேவை என்ன? நாடுகடந்த அரசுக்கும் புகலிட அரசுக்குமிடையே வேறுபாடு உண்டா? அல்லது இரண்டும் ஒன்றேதானா? நாடுகடந்த தமிழீழ அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனில் அது எவ்வாறு உருவாக்கப்படும்? நாடுகடந்த அரசை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகள் ஒப்புதல் அளிக்குமா? என்பனபோன்ற முக்கிய கேள்விகளும் அவற்றுக்கான தெளிவான விளக்கமும் 16 பக்கங்கள் தமிழிலும், 16 பக்கங்கள் ஆங்கிலத்திலுமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.