சேர் ஹேர்பர்ட் பிறிற்றெயின். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
xxx, 324 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
The British Budgetary System என்ற தலைப்பில் Sir Herbert Brittain அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி லண்டன் George Allen and Unwin Ltd வெளியிட்டிருந்த ஆங்கில மூல நூலின் தமிழாக்கம் இதுவாகும். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய திறைசேரியின் வரவு-செலவுத் திட்டக் கிளையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி இளைப்பாறியவர். 13 இயல்களைக் கொண்ட இந்நூல் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் காலமும் பாராளுமன்ற விவகாரமும், வரவுசெலவுத் திட்டத்தின் பொருளாதாரப் பின்னணி, வரவுசெலவுத் திட்டத்தின் பொது அமைப்பு, வரவுசெலவுத் திட்டவிபரம் (வருமானம், கோட்டுக்கு மேலுள்ள செலவு, கோட்டின் கீழ்) வேறொன்று கூறல்: வெளியீட்டுப் பகுதியும் நாணயமாற்றுச் சமன்பாட்டுக் கணக்கும், கருவூலத்துக்கு நிதி உதவுதல், தேசீயப் படுகடன், விநியோகச் செலவு பற்றிய கட்டுப்பாடு (வரவுசெலவு மதிப்பீடுகளின் உருவமும் அவற்றைத் தயாரிக்கும் முறையும்), விநியோகச் செலவு பற்றிய கட்டுப்பாடு, செலவுசெய்தலும் கணக்கு வைத்தலும், கணக்குத் தணிக்கை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.