7209 பிரதேச சபையும் மலையக மக்களும்.

சமூக அபிவிருத்தி நிறுவகம். கண்டி: சமூக அபிவிருத்தி நிறுவகம், 37. போதியங்கன மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (கண்டி: சொலிட் கிராப்பிக்ஸ்).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12.5×16.5 சமீ., ISBN: 978-955-9391-09-8.

மூன்று பகுதிகளாக வகுத்து மலையக மக்களுக்கு பிரதேச சபை நிர்வாகம் பற்றி எளியமுறையில் விளக்கும் தகவல் கைநூல் இது. முதலாவது பகுதியில் அபிவிருத்தி என்றால் என்ன? ஆட்சி என்றால் என்ன? இலங்கையில் உள்ள ஆட்சி மட்டங்களான மாகாண சபைகள், மாநகர, நகர, பிரதேச சபைகள் ஆகிய உள்ளுராட்சி மன்றங்கள் என்பன பற்றிச் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இரண்டாவது பகுதியில், பிரதேச சபை என்றால் என்ன என்ற விளக்கமும், மூன்றாவது பகுதியில் பிரதேச சபையும் தோட்ட மக்களும் என்ற விடயமும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கங்களை பிரதேச சபை உறுப்பினர்களே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்