சிவஞானம் ஜெயசிங்கர் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 5: சக்தி, பால்நிலை சமஉரிமைக்கான செய்திட்டம், கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம், 12, அமரசேகர மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு: சூரிய அச்சகம்).
viii, 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ, ISBN: 955-8027-04-9.
நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அறிமுகம் என்ற 1வது பிரிவில் பால்நிலையும் பொதுசன சேவையும், பால்நிலையைப் பிரதானப்படுத்தல், வழிகாட்டியின் வாய்ப்புக்களும் நோக்கமும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பின்னணி என்ற இரண்டாம் பிரிவில் பால்நிலை சமத்துவத்துக்கும், சம உரிமைக்குமான நிர்ணயங்கள், பால்நிலைச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைரீதியிலான அணுகுமுறைகளின் விருத்தி ஆகிய இரு விடயங்களும், பொதுசன சேவையின் ஆளணி முகாமைத்துவத்தில் பால்நிலையைப் பிரதானப்படுத்துவதற்கான நிறுவனத்திட்ட வரம்பு என்ற மூன்றாவது பிரிவில், பால்நிலை முகாமைத்துவ முறையியல், சாத்தியமாக்கும் சூழ்நிலை, பால்நிலை முகாமைத்துவ முறையியலின் கட்டமைப்புகள், பால்நிலை முகாமைத்துவ முறையியல் பொறிமுறைகள் ஆகிய விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. இறுதிப் பிரிவான நான்காவது இயலில் பொதுசன சேவையின் ஆளணி முகாமைத்துவத்தில் பால்நிலையினைப் பிரதானப்படுத்தவதற்கான படிமுறைகள் என்ற தலைப்பின் கீழ், பால்நிலைப்பகுப்பாய்வு, கொள்கை அபிவிருத்தி, ஆளணி முகாமைத்துவத்தில் பால்நிலை தொடர்பான கொள்கை விடயங்கள், கொள்கை மதிப்பீடு, பால்நிலை செயற்பாட்டுத் திட்டம், கண்காணிப்பும் மீளாய்வும், உள்ளக மற்றும் வெளிப்புறத் தொடர்பாடல்கள் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 574803).