7255 வீரத் தளபதி: நாட்டுக்கூத்து.

ஏ.பாலதாஸ். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).

(14), 58 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×13.5 சமீ., ISBN: 955-9262-24-6.

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் புனித செபஸ்தியார் என்னும் பெயர்பெற்ற வீரத்தளபதி ஒருவரின் கதை இதுவாகும். இந்தக் கூத்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை தியோக் கிளேசியன் என்ற மன்னன் ஆண்ட காலத்தில் பிரான்ஸ் தேசத்தில் பிறந்து இத்தாலியில் தாயுடன் வாழ்ந்த செபஸ்தியன் (கிரேக்க மொழியில் உயர்ந்தோன், பெருமகன் எனக் கருத்துப்படும்) என்ற தளபதியின் கதையாகும். கிறிஸ்துவத்தில் இவர் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பகிரங்க இடத்தில் இவர்மேல் அம்பு எய்து மரணதண்டனை வழங்கப்பட்டது. குற்றுயிராக விடப்பட்ட அவரை இறேனே என்ற விதவைப்பெண் காப்பாற்றிக் குணப்படுத்துகின்றார். குணமான பின்பும் தான் கொண்ட சமயப்பற்றின் காரணமாக மன்னனிடம் மீண்டும் செல்கின்றார் செபஸ்தியார். தியோக்கிளேசியன் அவரைக் கண்டு மீண்டும் தன் மரண தண்டனையை நிறைவேற்றுகின்றார். புனிதரான செபஸ்தியாரின் கதை நாட்டுக்கூத்தாக இந்நூலில் சொல்லப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்