சபாபதி நாவலர். யாழ்ப்பாணம்: அ.சிவகுருநாதபிள்ளை, வடகோவை, 2வது பதிப்பு, வைகாசி 1927, 1வது பதிப்பு, கார்த்திகை 1889. (சென்னை: சாது அச்சுக்கூடம்).
xxxiv, (21), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
தமிழ் இலக்கண இலக்கிய சாத்திர மெய்வரலாறுகளை, அன்றெழுந்த தமிழ் நூல்கள் பற்றிய செய்திகளை இனிதுபடக்கூறும் நூல் இதுவாகும். இந்நூல் தமிழின் தெய்வப்பழமை மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்களால் இயற்றப்பட்டு சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் கார்த்திகை 1889இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை அவரது மருமகனாரான அ.சிவகுருநாதபிள்ளையவர்கள் 1927இல் மீள்பதிப்பாகப் பிரசுரித்துள்ளார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27276).