7291 விஞ்ஞானமும் தொழினுட்பவியலும்: தரம் 11 மாணவர்களுக்கான வழிகாட்டி.

வை.க.தவமணிதாசன். கொழும்பு 4: வை.க.தவமணிதாசன், இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி).

xii, 224 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.

விவசாயத் தத்துவங்கள் என்ற நூலின் ஆசிரியரான தவமணிதாசன், குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பயிற்சிபெற்று ஆசிரியரானவர். ஆசிரியர் கைநூலில் உள்ள கற்றற் பேறுகளைச் சிறு குறிப்பாக்கித் தந்துள்ளார். ஒவ்வொரு அலகிலும் பல்தேர்வு வினா, குறும்வினா, சரி பிழை தேர்வு, கீறிட்ட இடங்களை நிரப்புதல் போன்ற கணிப்பீட்டு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் இனப்பெருக்கம், அளவறி இரசாயனவியல், உலோகங்களும் அவற்றின் உபயோகமும், விசை, சக்தி ஆகியவற்றின் பயன்பாடுகள், பாறைகளும் கனியங்களும், மின்னின் பயன்கள், றப்பர் பாலும் றப்பர் பால் உற்பத்திகளும், கனிய நெய்யும், கனிய நெய் உற்பத்திப் பொருட்களும், தலைமுறையுரிமை, கூர்ப்பு, அடிப்படை இலத்திரனியல், ஒலி ஒளி அலைகளின் பயன்பாடு, தாக்கவீதங்கள், உயிர்க்கோளம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்