ஆ.தா.ஆறுமுகம். நியூசிலாந்து: A.T.Arumugam, 101, Epuni Street, Lower Hutt, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (நியூசிலாந்து: அச்சக விபரம் தரப்படவில்லை).
52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
நூலாசிரியர், Construction of Concentric Magic Squares என்ற இந்த வித்தைச் சதுரங்கள் பற்றிய நூலை தமிழ் வாசகர்களுக்காக உருவாக்கியுள்ளார். எண்களைக் குறித்த சில ஒழுங்குகளிற் சதுர வடிவில் எழுத அணி, நிரை, மூலைவிட்டம் ஆகிய எல்லா வழிகளிலும் கூட்டுத்தொகை சமமாக அமைவது வித்தைச் சதுரம் (Magic Square) எனப்படும். இந்நூல் வித்தைச்சதுரங்களை ஆக்கும் முறைகள் பற்றி விரிவாக விளக்குகின்றது. நூலாசிரியர், யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்து தெல்லிப்பழையில் வளர்ந்து இளவாலையில் திருமணஞ்செய்தவர். தற்போது நியூசிலாந்தில் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்கின்றார். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து அதிபராகப் பணியுயர்வு பெற்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இறுதியாகப் பணியாற்றிய வேளை ஓய்வுபெற்றவர்.