A.R.R.பர்ணாந்து (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P..ஏக்கநாயக்க, H.R.நிமால் ஜயசேகர, E.A.D.ஏக்கநாயக்க, P.கணநாதபிள்ளை (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், புள்ளி ஒன்றின் ஒழுக்கு, அடிப்படையான கேத்திரகணிதச் சார்புடைய நான்கு ஒழுக்குகள், கவராயம், வரைகோல் என்பனவற்றுடன் செய்யக்கூடிய அமைப்புகள், கோணங்கள் அமைத்தல், கோணங்களை இருகூறிடல், சமாந்தரக் கோடுகள் அமைத்தல், பல்கோணிகளை அமைத்தல், வட்டங்களுக்குத் தொடலிகள் அமைத்தல் ஆகிய விடயங்களை அறிந்துகொள்ளலாம்.