கு.கருணேஸ்வரன். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135 கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி அச்சகம்).
(8), 160பக்கம், விலை: ரூபா 140., அளவு: 24×18.5 சமீ.
தரம் ஏழுக்குரிய கணித பாடத்திட்டத்துக்குள்ளடங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்நூல் ஒற்றை எண்களும் இரட்டை எண்களும், பெரிய எண்கள், காரணிகளும் மடங்குகளும், திண்மங்கள், நீளம் தொடர்பான கணித்தல்கள், அட்சர கணிதக் கோவைகள், நிறை, காலம், பின்னங்கள், தசமங்கள், கோணங்கள், திசைகொண்ட எண்கள், சமாந்தரக் கோடுகள், சுட்டிகள் ஆகிய பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. நூலாசிரியர் கல்வித் திணைக்களத்தின் மேல்மாகாண கணித ஆசிரிய ஆலோசகராவார்.