7390 இலங்கையிற் கலை வளர்ச்சி.

க.நவரத்தினம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2 டாம் வீதி, 3வது பதிப்பு 2007, 1வது பதிப்பு, 1954. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

xviii, 142 பக்கம், 34 புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-070-6.

இந்நூலின் முதற்பதிப்பு  1954இல் ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றப் பிரசுர வரிசையில் முதலாவது வெளியீடாக திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பெற்று வெளிவந்தது. இந்தியாவும் இலங்கையும், இலங்கையிற் சிற்ப வளர்ச்சி, தாதுகோபங்கள், பௌத்த சிற்ப வடிவங்கள், சைவ சிற்ப ஆலயங்களும் வடிவங்களும், யாழ்ப்பாணத்திற் சைவ ஆலயங்கள், இலங்கை ஓவியங்கள், கலையும் கைத்தொழிலும், இந்திய கலா தத்துவம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் அநுபந்தமாக ஆனந்தக் குமாரசுவாமி வாழ்க்கைச் சுருக்கம், படங்கள், உசாத்துணை, அரும்பொருள் அட்டவணை ஆகியன இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் கந்தையா நவரத்தினம் (1898-1962) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, அதே கல்லூரியிலேயே 1920ம் ஆண்டு முதல் வர்த்தகத்துறை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் யாழ்ப்பாணத்தின் கலை, நுண்கலை வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 616383).

ஏனைய பதிவுகள்

8181 மூவர் தமிழ்.

மட்டுவில் ஆ.நடராசா. சாவகச்சேரி: அருள்மிகு மகா முத்துமாரியம்பாள் தேவஸ்தானம், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). v, 62 பக்கம், விலை: ரூபா