மட்டுவில் ஆ.நடராசா. சாவகச்சேரி: அருள்மிகு மகா முத்துமாரியம்பாள் தேவஸ்தானம், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
v, 62 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21×14 சமீ.
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்போரது தேவாரங்கள் முழுவதையுங் கற்றுத் தேர்ந்தெடுத்த சிலவற்றைப் பொருளாகக் கொண்டு மூவர் தமிழ் என்னும் இந்நூலினை ஆசிரியர் எழுதியுள்ளார். இறைவன் தவறு செய்வோருக்கும் மன்னிப்பு வழங்கி ஆட்கொள்வது, வஞ்சக மனத்தாரிடை நில்லாமை, விதிப்படி செய்யும் பூசை, விதிவிலக்காகச் செய்யும் பூசை, ஒழுக்கமுடையோர் விலக்க வேண்டியன, செய்யவேண்டியன, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றின் பயன்பாடுகள் எனப் பல்வேறு விடயங்களும் இங்கு கட்டுரையுருவில் சுவைபடக் கூறப்பட்டுள்ளது.