7403 அரங்கியற் கட்டுரைகள்.

கந்தையா ஸ்ரீகந்தவேள். யாழ்ப்பாணம்: தெஸ்பியன் கலை வட்டம், இணுவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (இணுவில்: வைரஸ் கிராப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி).

vi, 106 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

இந் நூலாசிரியர் யாழ்ப்பாணம், இணுவில்-மஞ்சத்தடியைச் சேர்ந்தவர். பண்பாட்டு நடவடிக்கையாக அரங்கு, தமிழக அரங்கு-சுருக்கக் குறிப்புகள், இலங்கைத் தமிழரங்கு-ஒரு பருவரை, இலங்கைத் தமிழ் மரபுவழி நாடகங்கள்-ஒரு பார்வை, கலையரசு க.சொர்ணலிங்கம்-அரங்கப் பங்களிப்பு, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை-நாடகப் பங்களிப்பு, ஈழத்துத் தமிழரங்கில் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம், பல்கலைக்கழகத் தமிழரங்கு- சில குறிப்புகள், அரங்கில் யதார்த்தவாதம்-சில சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் கந்தையா ஸ்ரீகந்தவேள் எழுதிய பத்துத் தமிழ் அரங்கியல்  கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36691).

ஏனைய பதிவுகள்

15600 மூன்றாம் சாமத்து புன்னகை.

எம்.ரி.எம்.யூனுஸ். காத்தான்குடி: இஸ்லாமிய இலக்கியக் கழகம், 150, கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி -3, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 116 பக்கம், விலை: ரூபா