ஆர்த்தி பரமேஸ்வரன். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-1997-23-6.
ஆர்த்தி பரமேஸ்வரன் இந்நூலிலுள்ள கதையை எழுதியுள்ளதுடன் இதிலுள்ள அனைத்துப் படங்களையும் வரைந்துள்ளார். லண்டனில் உள்ள டொல்வேர்த் மகளிர் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்விகற்றுப் பின்னர் ஓவியக் கலை சம்பந்தமான ஒரு வருடப் பயிற்சிநெறியை Epsom University College for the creative Arts என்ற நிறுவனத்தில் பயின்றவர். தற்போது Farham University College for the Creative Arts என்ற நிறுவனத்தில் வரைகலை அசைவியக்கம் பற்றிய பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். சர்க்கஸ் கோமாளியான ராமுவின் தொலைந்துபோன சிகப்பு மூக்கை நண்பர்களுடன் சேர்ந்து தேடுவது கதை. மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடாது. போட்டி உணர்வு இருக்கலாம் அது மற்றையவர்களைப் பாதிக்கும் பொறாமையாக மாறக்கூடாது என்ற போதனையைக் குற்றவாளியான குரங்காரினூடாக வெளிப்படுத்துகின்றார்.