7450 வட மொழி இலக்கிய வரலாறு: செம்மொழிக் காலம்.

நவாலியூர் சோ.நடராசன். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, ஏணஸ்ட் த சில்வா மாவத்தை,  1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

x, 406 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

வேதகால இலக்கிய வரலாற்றை ஏற்கெனவே கைலாசநாதக்குருக்கள் வெளியிட்டுள்ள நிலையில், அதற்குப் பிந்திய செம்மொழியான சம்ஸ்கிருத மொழியில் உள்ள இலக்கியத்தின் வரலாற்றை இந்நூல் விபரிக்கிறது. இந்நூலில் பிரதானமாக இதிகாச புராணங்களைப் பற்றியும், காவியங்களைப் பற்றியும், கதை நாடகம் அணி என்பன பற்றியும் சில தரிசனங்களைப் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் நாடக வளர்ச்சி குன்றியிருப்பதால் வடமொழி நாடகமரபு, அதன் இலக்கணம் என்பவற்றைச் சற்று விரிவாக இங்கே எடுத்துக்காட்டியிருக்கிறார். சரித்திர காவியம், அர்த்தசாஸ்திரம், காமசாத்திரம், என்பனவும் இடம்பெற்றுள்ளன. அணி பற்றிய அதிகாரம் இலக்கிய விமர்சனத்திற்கும் பயனுள்ளதாகும். இவை அனைத்தும் 15 அத்தியாயங்களில் முறையே செம்மொழித் தோற்றம், இதிகாசங்கள், புராணங்கள், காவிய உதயம், பெருங்காப்பியங்கள், அகப்பாட்டு: பக்திப்பாடல்கள், கதை, சரித்திர காவியம், நாடகம், நாடக இயல், அணியியல், தரும சாத்திரமும்அர்த்த சாத்திரமும், வேதக் காட்சி, தரிசனங்கள், சாங்கிய யோகம் ஆகிய தலைப்புகளில் விபரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

9453 இளம் பெண்ணோயியல்.

அ.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: Daniel Chapman Vaitilingam Commemoration Committee 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: திருமகள் அச்சகம், சுன்னாகம்/யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்ஃயாழ்ப்பாணம்: கலாநிலையம்). (8), 422 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 22×14.5

Casino Tillsammans Svensk perso Tillstånd

Content Freespins Gällande Merlin’s Tower Hurdan Klubba Karl Vilket Såsom Befinner si Det Lättaste Casinospelet Att Slå På? Nätspelsguide: Finna Det Bästa Nätcasinot Ino Sverige