8025 நூலகங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்: கோட்பாடும் பிரயோகமும்.

விமலா வேல்தாஸ். யாழ்ப்பாணம்: விமலா வேல்தாஸ், புது வீதி, கொக்குவில் மேற்கு, 1வத பதிப்பு, ஜனவரி 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).

xiv, 193 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-54098-0-3.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிப் பெற்ற பட்டறிவையும், நூலக தகவல் விஞ்ஞானக் கற்கைநெறியினைப் பயின்று பெற்ற அறிவையும் துணைசேர்த்து இந்நூலை ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார். தகவல் (தகவல் விஞ்ஞானம், தகவல் சார் அறிவு, தகவல் அமைப்புக்கள்), தகவல் வளங்கள் (அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நூல்விபரப்பட்டியல், பருவ இதழ்கள், சுட்டிகள், சாராம்சங்கள், தகவல் வள அபிவிருத்தி),  நூலகங்களில் தகவல் தொழில்நுட்பம் (நூலக தன்னியக்கமாக்கம், நூலக தரவுத்தள முகாமைத்துவ முறைமை, ஒருங்கிணைக்கப்பட்ட நூலக முறைமை), தகவல் மீளப்பெறும் முறைமை (சுட்டியாக்கம், சொற்களஞ்சியங்கள்), நூலக தகவல் சேவையில் இணையம் (இணையத்தின் தாக்கங்கள்), நூலகங்களில் டிஜிட்டல் இடைவெளி (நூலக தகவல் வலையமைப்புக்கள்) ஆகிய தலைப்புகளில் நூலகங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்