அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 2வது மீளாய்வுப் பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 10: குமரன் அச்சகம்;, இல. 39, 36வது ஒழுங்கை).
xv, 218 பக்கம், விலை: ரூபா 1750., அளவு: 25×17 சமீ., ISBN: 978-955-659-132-3.
நூலகவியல்துறையில் ஈழத்தில் தமிழில் எழுந்த இரண்டாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும். பகுப்பாக்கப்பகுதி, அகரவரிசைப்பகுதி என இருபிரிவாக இந்நூலின் பதிவுகள் அமைந்துள்ளன. திறவுச் சொற்களையும் அதனுடன் இணைந்த சார்புநிலைச் சொற்களையும் பகுப்பாக்கப்பகுதி உள்ளடக்குகின்றது. அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் கல்விசார் நூலகராகப் பணியாற்றுகின்றார்.