டொமினிக் ஜீவா (ஆசிரியர்). கொழும்பு 13: மல்லிகை, 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 13: லட்சுமி பிரிண்டர்ஸ்).
136 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 27.5×20 சமீ.
15.08.1966 அன்று ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை உலகில் கால்பதித்து 47 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மல்லிகை மாத இதழின் 392ஆவது இதழ் 2012 க்கான சிறப்பிதழாக மா.பாலசிங்கம், மேமன்கவி, எஸ்.லிகோரின் றோசி ஆகியோரின் உதவியுடன் ஆசிரியர் டொமினிக் ஜீவா உருவாக்கியுள்ளார். இவ்விதழை சபா.ஜெயராஜா, செங்கை ஆழியான், அந்தனி ஜீவா, தெணியான், கனடா க.நவம், க.சட்டநாதன், தம்பு சிவா, திக்குவல்லை கமால், அநாதரட்சகன், முருகபூபதி, யு.ர்.ஆ.நவாஸ், கெக்கிராவ சஹானா, தீபச்செல்வன், என்.நஜ்முல் ஹூசைன், ஆனந்தி, தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா, எம்.எம்.மன்ஸூர், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், மேமன்கவி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், நாச்சியாதீவு பார்வின், ச.முருகானந்தன், தாட்சாயணி, ந.இரவீந்திரன், வேல் அமுதன், வெற்றி துஷ்யந்தன், தெளிவத்தை ஜோசப் ஆகியோர் இணைந்து தமது படைப்புக்களைப் பிரசுரித்து அலங்கரிக்கின்றனர்.