என்.சிவராஜா, கே.கோபாலகிருஷ்ணன், ஜனகா பரமராஜா. யாழ்ப்பாணம்: Association for Rehabilitation of the Disabled, 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பதிப்பகம், 424 காங்கேசன்துறை வீதி).
(6), 18 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54031-0-8.
வைத்தியர்களிடம் நோயாளியாகச் செல்லும் செவிப்புலன் இழந்தவர்கள் துணையின்றிச் செல்லும் நிலை ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் தவிர்க்கவியலாததாகிவிட்டது. தமது தொடர்பாடலை சுயமாக மேற்கொள்வதற்கும், அத்தகையோரின் கையசைவுகளை தெரிந்துணர்ந்து கொள்ள முயலும் வைத்தியர்களுக்கும் உதவும் வகையில் இச்சிறுநூல் வண்ண விளக்கப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவான அறிகுறிகள், சுவாசத் தொகுதி, இனப்பெருக்க/சிறுநீர்த்தொகுதி, நரம்புத் தொகுதி ஆகிய பிரிவகளின் கீழ் இவ்விளக்கம் புகைப்படவழியாகவும் தமிழ்/ஆங்கில இருமொழி மூலமாகவும் தரப்பட்டுள்ளது. இந்நூலுக்கான ஆங்கிலத் தலைப்பு Communicating with a patient who has hearing loss and impaired speech என்பதாகும்.