எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, சித்திரை 2000. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).
136 பக்கம், விலை: 125., அளவு: 20×14 சமீ.
தமிழ்மொழிமூலம் அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்ற பாடத்திட்டத்தைக் கற்கும் ஜீ.சீ.ஈ உயர் வகுப்பு மாணவர்களுக்கும், ஜீ.ஏ.கியூ மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இக்குறிப்புகள் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன. வாக்கியங்களைக் குறியீட்டில் அமைத்தல், வாதங்களைக் குறியீட்டில் அமைத்தல், உண்மை அட்டவணைகள் மூலம் பெறுமானங்களை மதிப்பிடல், வாதங்களின் வாய்ப்பினைத் துணிதல், பெறுகை முறை, தேற்றம், உண்மைப் பெறுமானம் மதிப்பிடல், மொழிபெயர்ப்பும் குறியீட்டாக்கமும், சமன், சமனின்மை பற்றி அறிதல் ஆகிய ஒன்பது பிரதான தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொதுவானவை, சிறுகுறிப்புரை ஆகிய இரு இயல்கள் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் கீழே கடந்தகால பரீட்சை வினாக்களும் இடம்பெற்றுள்ளன.