மா.வேதநாதன். சுன்னாகம்: சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, 2008. (சங்கானை: சாய்ராம் பிரிண்டர்ஸ்).
vi, 111 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×14.5 சமீ.
சந்தனாசாரியர் தமிழகத்தில் தமிழ்மொழியில் வழங்கிய சைவமே சைவசித்தாந்தம் என்றும் சித்தாந்த சைவம் என்றும் தத்துவச் சைவமென்றும் வழங்கப்பெறுகின்றது. சந்தனாசாரியர் நிலைநிறுத்திய சைவசித்தாந்த மெய்யியலுக்கு சிவாகமங்களும் சைவத்திருமுறைகளும் பிரதான பிரமாணப் பனுவல்களாக விளங்குகின்றன. இந்நூலில் மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நான்கு சந்தனாசாரியர்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய 14 சித்தாந்த சாத்திரங்கள் தோன்றிய தத்துவப் பின்னணியும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. 2005இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனமான சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தின் முதலாவது வெளியீடு இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229598).