அன்ரன் சின்னராசா பிலிப் (மலராசிரியர்). கனடா: ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம், 19, கலோகில் அவென்யு, றிச்மண்ட் ஹில், ஒன்ராரியோ L4B 4H5, 1வது பதிப்பு, 2012. (கனடா: விரைவு அச்சுக் கலையகம், ரொரன்ரொ).
(4), 144 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN: 978-0-9879597-1-3.
1987இல் கனடாவில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம் தான் கடந்துவந்த இருபத்தைந்து ஆண்டுக்காலப் பயணத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழ்க் கத்தோலிக்க மக்களின் கடந்த இருபத்தைந்து ஆண்டு வளர்ச்சியை, தமது சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்திவரும் தாக்கங்களை, இந்நாடுகளில் கத்தோலிக்க தமிழ் மக்கள் குடியேறிய பாணி, அவர்கள் வாழும் நகரங்கள், இந்நகரங்களைத் தேர்ந்துகொண்ட காரணிகள் போன்ற பல்வேறு விடயங்களை பரவலாக இந்நூலில் உள்ள கட்டுரைகளும், வண்ணப் புகைப்பட ஆவணங்களும் வழங்குகின்றன.