8122 வட இலங்கை பரிபாலினியாகிய யாழ்ப்பாண பருசுத்த புதுமை மாதாவின் ஆலயச் சரித்திர வரலாறு.

ஞா.ம.செல்வராஜ். யாழ்ப்பாணம்: புதுமை மாதா கோவில் நிர்வாகம், 2வது பதிப்பு, மாசி 2008, 1வது பதிப்பு, ஆனி 1958. (யாழ்ப்பாணம்: ஏ.சி.எம். அச்சகம்).

vii, 52 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.

ஈழத்தில் கத்தோலிக்கம், மன்னாரும் மதமாற்றமும், சங்கரனின் சங்காரம், வித்திட்ட முத்துக்கள், யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் ஆதிக்கம், யாழ்ப்பாணத்தில் பிரான்ஸிஸ்கன் சபை, பரராசசேகரனால் உபகரிக்கப்பட்ட வெற்றிமாதா ஆச்சிரமம், வெற்றிமாதா ஆலய ஆரம்பமும் அந்தோனியோ சுவாமியாரின் மரக்குற்றியும், நாவாந்துறை அன்னக்குட்டி மேஸ்திரி, அன்னக்குட்டி மகள் அஞ்சியா, சுற்றுப்பிரகாரமும் வெடி விபத்தும், வட இலங்கையின் இராச்சிய பரிபாலினி, தொண்டமானாற்றில் புதுமைமாதாவின் காட்சியும் பருத்தித்துறையின் வெற்றியும்,  புதுமை மாதா ஆலயத்திற்கு வந்த காணிக்கை, இராச புத்திரரின் ஞானதீட்சை, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், மறைவாய்க் கொண்டுசென்ற மாதா சுரூபம், சுவாமி ஞானப்பிரகாசருக்குக் கிடைத்த பெரும் பாக்கியம், புதிய புதுமை மாதா ஆலயம் ஆகிய 19 தலைப்புகளில் இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது. புதுமை மாதாவுக்கு செபப் பூச்செண்டு என்ற தலைப்பில் புதுமைமாதா தரிசிப்புச் செபம், புதுமைமாதா மன்றாட்டுச் செபம், காணிக்கை மாதாவுக்கு மங்கள மன்றாட்டம், அர்ச்.காணிக்கை மாதா பிரார்த்தனை ஆகிய நான்கு  செபங்களும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  192985)

ஏனைய பதிவுகள்

15551 தூறல்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள். யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, வைகாசி 2008. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ். பிரின்டர்ஸ், சண்டிலிப்பாய்). viii, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: