நா.முத்தையா. கனடா: வி.கந்தவனம், தலைவர், ஆத்மஜோதி தியான நிலையம், 3வது பதிப்பு, மே 2002, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980, 2வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
வீட்டு வழிபாடுகளில் உபயோகிக்கப்படும் திருப்பாடல்களின் தொகுப்பு இது. ஞானசுரபி, ஆத்மஜோதி நா.முத்தையா அவர்களின் குலதெய்வமான ஏழாலை இலந்தைகட்டி பாதாள வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உருவச்சிலையும் மணிமண்டபமும் சித்திரபானு வைகாசி விசாகத்தன்று (25.5.2002) திறக்கப்படும் விழாவினையொட்டி இம்மீள்பதிப்பு வெளியாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11818).