செ.சிவலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யூ.ஜீ. 50, பீப்பள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
xxii, 242 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-1857-93-6.
பத்தாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து பாடல்களைக் கொண்ட கச்சியப்பரின் கந்த புராணத்தை, ஆயிரத்து நாற்பத்தியெட்டுச் செய்யுட்களில் சுருக்கி இந்நூலை சைவ சித்தாந்த வித்தகரும், இளைப்பாறிய அதிபருமான பண்டிதர் செ.சிவலிங்கம் ஆக்கியுள்ளார். இவர் உடுப்பிட்டி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாவகச்சேரியில்- மட்டுவில் தெற்கில் வசித்தவர். கந்தபுராணம் என்னும் பெருங்கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இந்நூல் அமைகின்றது.